சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காக்கிச்சட்டை’ படம் பொங்கல்
வெளியீடாக வெளிவர இருந்தது. ஆனால், அன்றைய தேதியில் விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்கள்
வெளிவர இருந்ததால் போட்டியை சமாளிக்க முடியாமல் இப்படத்தின் வெளியீட்டை தள்ளி
வைத்தனர்.
இதையடுத்து, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின்
வேலைகளும் முடிவடையாததால் அந்த படமும் தள்ளிப் போனது. இதை தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொண்ட ‘டார்லிங்’ படக்குழுவினர் அப்படத்தை பொங்கலுக்கு வெளியிட்டனர்.
இந்நிலையில், ‘காக்கிச்சட்டை’ படம் வருகிற
பிப்ரவரி 27-ல்
வெளியாவதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 5-ந்
தேதி அஜித்தின் ‘என்னை
அறிந்தால்’, பிப்ரவரி 6-ல் தனுஷின் ‘ஷமிதாப்’, பிப்ரவரி 13-ல் ‘அனேகன்’ என பிப்ரவரியில்
பெரிய படங்களின் அணிவகுப்புகள் இருக்கையில் தன்னுடைய படத்துக்கும் வரவேற்பு
இருக்கும் என்று முடிவு செய்து பிப்ரவரியிலேயே ‘காக்கிச்சட்டை’ படத்தை களமிறக்க
முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘காக்கிச்சட்டை’ படத்தில்
சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது அவருடைய 7-வது படமாகும். ‘எதிர்நீச்சல்’, ‘மான்கராத்தே’ ஆகிய
படங்களுக்கு பிறகு அனிருத்தும், சிவகார்த்திகேயனும் இணையும் 3-வது படம்
இதுவாகும். இப்படத்தை துரை.செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக
நடித்துள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில்
தயாரித்துள்ளார்.
No comments:
Post a Comment