ஆம்பள திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் சென்று மூன்று மணி நேரத்தை காமெடியாக கண்டுகளிக்க வேண்டும் என்றால் அதற்கு சுந்தர்.சி இயக்கும் படத்தை பார்க்கலாம் என்ற மக்களின் நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கிறார் இந்த ஆம்பள படத்தின் வாயிலாக, கதை என்று பார்த்தால் பழையதாகத்தான் இருக்கும். அதை எப்படிப்பட்ட காதாபாத்திரங்களை கொண்டு சிரித்துவிட்டு வரும்படியான திரைகதையை உருவாக்குவதில் கில்லாடி சுந்தர்.சி.
அரசியல் மற்றும் அனைத்து விதமான கூட்டங்களுக்கும் ஆட்களை சப்ளை செய்யும் அதிரடி நாயகனாக அறிமுகமாகிறார் விஷால். அடுத்த காட்சியிலேயே அறிமுகமாகும் ஹன்சிகாவை பார்த்த உடனே காதலிக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு போட்டியாக போலீஸ் இன்ஸ்பெக்டாராக வரும் சந்தானமும் காதலை சொல்ல வருகையில் அது ஹைகிளாஸ் பொண்ணு உனக்கு சரிப்பட்டு வராது என்று துறத்திவிடுகிறார். விஷால்-ஹன்சிகா காதலிப்பதும், சந்தானத்திற்கு போலீஸ் வேலையை பறிக்கொடுப்பதும் முதல் அரைமணி நேரம் போவதே தெரியாமல் காமெடியில் நகர்கிறது படம்.
என்னடா சுந்தர்.சி படம்-னா ஏராளமான நடிகர்கள் வருவார்களே இன்னும் காணமே என்று பார்த்தா…! விஷால் அம்மாவிடம் இருந்து கதை தொடங்குகிறது… விஷால் பிறக்கும் முன்னரே அவருடைய அப்பாவான பிரபுக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது என்ற உண்மையை அறிந்து வீட்டைவிட்டு வெளியேறிய உண்மையை விஷாலிடும் கூறுகிறார். தற்போது மனம்திருந்தி பிரபுவையும் அவரது இன்னொரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகளையும் கண்டுபிடிக்கும்படியான வேண்டுகோளை ஏற்று கிளம்புகிறார் விஷால். செல்வந்தரான அப்பா பிரபுவை தில்லாங்கடி அப்பாவாக சந்திக்கிறார் விஷால் கூடவே அவர்களது சகோதரர்களாக வைபவ்வும், எதிர்நீச்சல் சதீஷ்-ம் கூட்டுச்சேர்கிறார்கள். மூன்று பேரும்சேர்ந்து செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.
பிளாஸ்பேக்கில்… ஊரில் நிரந்தர எம்.எல்.வாக இருக்கும் விஜயகுமார் தற்போது பிரபுவை தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுக்கிறார். ஆனால் தான் காதலித்த பெண்ணை விரட்டிவிட்ட அப்பாவை வெறுத்து ஒதுக்கிவிடுகிறார் பிரபு… இதற்கிடையில் எம்.எல்.ஏ. பதவிக்கு ஆசைப்பட்டு அவர் வீட்டுவேலைக்காரனே பிரபுவின் அப்பாவை கொலை செய்து வில்லனாக உறுவெடுக்க…. அந்தபழி பிரபு மீது வந்துவிழுகிறது. ஜெயிலில் இருந்து திரும்பிய பிரபு தன்னுடைய சொத்து எங்கும் போய்விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய மூன்று தங்கைகளுக்கு (ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா) வீட்டோட மாப்பிள்ளைகளாக பார்த்து திருமணம் செய்துவைத்துவிடுகிறார். மொத்த சொதத்தையும் எழுதியும் வைத்துவிடுகிறார்…. ஆனால் தன் அப்பாவை கொன்றவர், தங்கள் வா‌ழ்க்கையை கெடுத்தவர்… என்று பிரபுவை வீட்டைவிட்டே விரட்டிவிடுகிறார்கள் அவரது தங்கைகள்……
இந்நிலையில்… மீண்டும் ஒன்று சேரவேண்டும் என்றால் உங்கள் மூன்று அத்தைகளுக்கும் மூன்று பெண்கள் உள்ளனர்… அவர்களை எப்படியாவது நீங்கள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று விஷால்& கோ வை கட்டளையிடுகிறார் பிரபு….. இந்த சவாலை ஏற்றுக்கொண்டது அங்கு சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது. ஹன்சிகாதான் அத்தைபெண் என்று… கூடவே மற்ற இருவருக்கும் இரு நாயகிகள்…போலீஸ் போல் வேடமிட்டு அந்த குடும்பத்துடன் அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல் அந்த குடும்பத்துடன் சேர்கிறார்கள். அதே வேளையில் எம்.எல்.ஏ., தேர்தலும் வருகிறது. இந்த முறை அந்த தேர்தலில் வில்லனை எதிர்த்து ரம்யாகிருஷ்ணன் போட்டியில் குதிக்கிறார். பக்கபலமாக விஷால் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் விஷாலும் கூட இருப்பவர்களும் தன்னுடைய அண்ணனுடைய பையன்கள்தான் என்று தெரியவர இவர்களையும் வீட்டைவிட்டு விரட்டுகிறார் ரம்யாகிருஷ்ணன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்தலில் வெற்றிபெற வில்லன் செய்யும் சோதனைகளை விஷால் எப்படிமுறியடிக்கிறார் என்றும்…? போட்டியில் யார் வெற்றி பெற்றது…?? பிரபுவை மன்னித்து ஏற்றுக்கொண்டாரா…? விஷால் உள்ளபட மூவருக்கும் திருமணம் நடந்ததா…. என்பது கிளைமேக்ஸ்
அதிரடி நாயகனான விஷால் இந்த படத்தில் அதிரடி மற்றும் காமெடி கலந்து நடித்திருக்கிறார். ஹன்சிகா மாடர்ன் கேளாக வந்து அனைவரின் மனதை கொள்ளையடிக்கிறார். ஹிப்பாப் தமிழாவின் இசையில் இரண்டு பாடல்கள் மட்டும் சூப்பர், பின்னனி இசை படத்திற்கு பலம்.
காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானம் வந்தாலே அரங்கம் குலுங்க குலுங்க சிரிக்கிறது டயலாக்குகள் அனைத்தும் அசத்தல். ரேஷன் கடைக்கு வந்திட்டு இது நல்லா..இல்ல அது நல்லா…இல்ல என்று குறைகூறுவதை விட்டுவிட்டு கொடுத்த பணத்திற்கு நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கிறாரா என்று மட்டுமே தான் பார்க்கவேண்டும். சுந்தர்.சியின் கணிப்பு ஒரு போதும் தப்பாது அது போலத்தான் இந்த படமும் காமெடி கலாட்டா.
மொத்தத்தில் வெரப்பான ஆம்பள இல்லைங்க உங்கள சிரிக்கவைக்கும் ஆம்பள

No comments:

Post a Comment