சென்னை : ‘என்னை அறிந்தால்’ படம் வெளியிடப்படும் நாளில் நடிகர் அஜீத் கொலை செய்யப்படுவார் என்ற
மிரட்டல் கடிதம் தமிழ் திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்
அஜீத் கதைநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. திரிஷா,
அனுஷ்கா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை கவுதம் வாசுதேவ்
மேனன் இயக்கி உள்ளார். வரும் 5ம் தேதி திரைக்கு வரும் என தெரிகிறது.
இந்நிலையில், அசோக் நகரில் உள்ள திரையரங்கத்துக்கு ஒரு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் “ஹலோ சார் உங்க தியேட்டர்ல வெளியாகிற அஜீத் படத்துக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது. ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும்போது, அஜீத் குமாரை கொலை செய்ய இருக்கிறார்கள்.
அவர்கள் இந்த படம் வெளியாகும் 8 திரையரங்குகளில் குண்டு வைத்து தகர்க்க உள்ளார்கள். இது அஜீத் குமார் அவர்களுக்கும் தெரியும். எனவே, தங்களையும் தங்கள் திரையரங்கையும் காப்பாற்றி கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வெறி சீரியஸ் அன்ட் பி கேர்புல். இப்படிக்கு அஜீத் ரசிகன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுபோல் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொண்ட மிரட்டல் கடிதம் கண்டு தியேட்டர் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டிற்கு இதுபோன்று மிரட்டல் கடிதம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அஜீத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment