கிரீடம், அமர்க்களம், வரலாறு, வீரம், ஆரம்பம் என அஜீத் பட தலைப்புகளில் எப்போதும் ஒரு வேகம், கெத்து
இருக்கும். அஜீத் நடிக்க கவுதம் மேனன் இயக்கும் படத்துக்கு ‘என்னை
அறிந்தால்...‘ என டைட்டில் வைத்ததில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாக
கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு வைப்பதற்காக பல மாதங்கள் எடுத்துக்கொண்டபிறகும்
கடைசியில் கெத்து இல்லாத ஒரு டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்று இயக்குனர்
கவுதம் மேனனிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியது:அஜீத்தை பொறுத்தவரை இந்த
படத்தை தொடங்குவதற்கு முன்பே ஒரு விஷயத்தை எனக்கு தெளிவாக கூறிவிட்டார். நான்
நடிக்கி றேன் என்பதற்காக பஞ்ச் வசனமோ, தலைப்பில் பரபரப்போ இருக்க வேண்டும் என்று
எண்ணாதீர்கள். கதைப்படி அந்த கதாபாத்திரத்துக்கு எது பொருத்தமான வசனமோ அதை மட்டும்
எழுதுங்கள், தலைப்புகூட பட கதைக்கு பொருத்தமாகவே இருக்க வேண்டும் என்று
கூறிவிட்டார்.
அவரது சொல்படித்தான் இந்த தலைப்பு வைக்கப்பட்டது. என்னைப்பற்றி தெரிந்திருந்தும் நீ இப்படி செய்யலாமா என்ற தொணியில் இதில் அவர் வசனம் பேசுவார். அதை குறிக்கும் வகையிலேயே என்னை அறிந்தால் என தலைப்பு வைக்கப்பட்டது. பஞ்ச் வசனம்கூட தனிப்பட்ட முறையில் அவருக்கு எழுதப்படவில்லை. ஆனால் அவர் எவ்வளவு சாதாரணமாக பேசினாலும் அதை பஞ்ச் வசனமாக ரசிகர்கள் மாற்றிக்கொள்வார்கள். இப்படத்துக்கு டபுள் கிளைமாக்ஸ் வைத்திருப்பதாக எழுதுகிறார்கள். அப்படி எதுவும் இப்படத்திற்காக படமாக்கவில்லை.இவ்வாறு கவுதம் மேனன் கூறினார்.

No comments:
Post a Comment