புலி படத்தில் விஜய்க்கு மூன்று வேடம் – சிம்புதேவன்

கத்தி படத்தின் இரட்டை வேடத்தில் நடித்த விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் புலி படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி விஜய் இந்த படத்தில் முதலில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தான் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன, தற்போது அது இரண்டு அல்ல மூன்று என்று கிசுகிசுக்கப்படுகிறது. இரண்டு விஜய் கமாண்டோ மற்றும் கார்டூனிஸ்ட் வேடங்களிலும் மூன்றாவது விஜய்யின் கதாபாத்திரம் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளது என்கிறது கோடம்பாக்க ஏரியாக்கள்.
தலக்கோணத்தில் இன்னும் பத்து நாட்களுக்கு தொடர்ந்து படபிடிப்பு நடைபெறவுள்ளது, சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது என்பது தற்போதைய தகவல். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.


No comments:

Post a Comment