Showing posts with label Puli. Show all posts
Showing posts with label Puli. Show all posts

புலி படத்தில் விஜய்க்கு மூன்று வேடம் – சிம்புதேவன்

கத்தி படத்தின் இரட்டை வேடத்தில் நடித்த விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகிவரும் புலி படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி விஜய் இந்த படத்தில் முதலில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தான் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன, தற்போது அது இரண்டு அல்ல மூன்று என்று கிசுகிசுக்கப்படுகிறது. இரண்டு விஜய் கமாண்டோ மற்றும் கார்டூனிஸ்ட் வேடங்களிலும் மூன்றாவது விஜய்யின் கதாபாத்திரம் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளது என்கிறது கோடம்பாக்க ஏரியாக்கள்.
தலக்கோணத்தில் இன்னும் பத்து நாட்களுக்கு தொடர்ந்து படபிடிப்பு நடைபெறவுள்ளது, சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது என்பது தற்போதைய தகவல். இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.


அந்த கேரக்டருக்கு இவரை போடுங்க – விஜய்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகிவரும் புலி படத்தை அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார். அந்த படத்திற்கான கதை விவாதத்தில் கலந்து கொண்ட விஜய் அந்த கேரக்டருக்கு இவரை போடுங்க என சிபாரிசு செய்தாராம்.
அப்படி விஜய் சிபாரிசு செய்த நபர் யார் தெரியுமா தமிழ் சினிமாவிற்கு பாலாவால் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டு ராஜேஷ் மற்றும் அட்லீயால் காமெடியனாக காட்டப்பட்ட நான் கடவுள் ராஜேந்திரன் தான். சமீபத்தில் வெளியான திருடன் போலீஸ் படத்தில் இவர் பெண் வேடம் அணிந்து நடித்த கெட்டப்பை பார்த்தவர்கள் வயிறு வலிக்க சிரிக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள். அந்த சிரிப்பில் விழந்தவர் தான் விஜய், அதனால் தான் இந்த சிபாரிசு.

அதோடு மட்டுமில்லாமல் இனி என்னுடைய அனைத்து படங்களிலும் அவருக்கு ஒரு கெட்டப் உண்டு என்று கூறியுள்ளார். தெய்வம் கூரை பிச்சுட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க இங்க கூரையை பங்களாவா மாத்த போகுது…கலங்குங்க கோஸ்ட் கோபால் வர்மா.

Puli

             We are proud to announce that Ilayathalapathy Vijay 58th movie with Dir. simbudevan is title as "PULI".