Showing posts with label Yennai Arindhaal. Show all posts
Showing posts with label Yennai Arindhaal. Show all posts

தல அஜித்துடன் மோதும் இளையதளபதி விஜய்

இளையதளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான 'கத்தி' படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படம் தெலுங்கில் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி அல்லது மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அதேபோல் தல அஜித் மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தை தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இந்த தெலுங்கு வெர்சனுக்கு 'எந்த வாடுகானி' என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுமே பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகி தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அஜீத் பட டைட்டிலில் கெத்து இல்லையா? கவுதம் மேனன் பதில்

கிரீடம், அமர்க்களம், வரலாறு, வீரம், ஆரம்பம் என அஜீத் பட தலைப்புகளில் எப்போதும் ஒரு வேகம், கெத்து இருக்கும். அஜீத் நடிக்க கவுதம் மேனன் இயக்கும் படத்துக்கு ‘என்னை அறிந்தால்...‘ என டைட்டில் வைத்ததில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு வைப்பதற்காக பல மாதங்கள் எடுத்துக்கொண்டபிறகும் கடைசியில் கெத்து இல்லாத ஒரு டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்று இயக்குனர் கவுதம் மேனனிடம் கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியது:அஜீத்தை பொறுத்தவரை இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே ஒரு விஷயத்தை எனக்கு தெளிவாக கூறிவிட்டார். நான் நடிக்கி றேன் என்பதற்காக பஞ்ச் வசனமோ, தலைப்பில் பரபரப்போ இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். கதைப்படி அந்த கதாபாத்திரத்துக்கு எது பொருத்தமான வசனமோ அதை மட்டும் எழுதுங்கள், தலைப்புகூட பட கதைக்கு பொருத்தமாகவே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

அவரது சொல்படித்தான் இந்த தலைப்பு வைக்கப்பட்டது. என்னைப்பற்றி தெரிந்திருந்தும் நீ இப்படி செய்யலாமா என்ற தொணியில் இதில் அவர் வசனம் பேசுவார். அதை குறிக்கும் வகையிலேயே என்னை அறிந்தால் என தலைப்பு வைக்கப்பட்டது. பஞ்ச் வசனம்கூட தனிப்பட்ட முறையில் அவருக்கு எழுதப்படவில்லை. ஆனால் அவர் எவ்வளவு சாதாரணமாக பேசினாலும் அதை பஞ்ச் வசனமாக ரசிகர்கள் மாற்றிக்கொள்வார்கள். இப்படத்துக்கு டபுள் கிளைமாக்ஸ் வைத்திருப்பதாக எழுதுகிறார்கள். அப்படி எதுவும் இப்படத்திற்காக படமாக்கவில்லை.இவ்வாறு கவுதம் மேனன் கூறினார். 

வெடிகுண்டு மிரட்டல் - என்னை அறிந்தால்

சென்னை : ‘என்னை அறிந்தால்’ படம் வெளியிடப்படும் நாளில் நடிகர் அஜீத் கொலை செய்யப்படுவார் என்ற மிரட்டல் கடிதம் தமிழ் திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜீத் கதைநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. திரிஷா, அனுஷ்கா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ளார். வரும் 5ம் தேதி திரைக்கு வரும் என தெரிகிறது.
இந்நிலையில், அசோக் நகரில் உள்ள திரையரங்கத்துக்கு ஒரு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் “ஹலோ சார் உங்க தியேட்டர்ல வெளியாகிற அஜீத் படத்துக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது. ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும்போது, அஜீத் குமாரை கொலை செய்ய இருக்கிறார்கள்.

அவர்கள் இந்த படம் வெளியாகும் 8 திரையரங்குகளில் குண்டு வைத்து தகர்க்க உள்ளார்கள். இது அஜீத் குமார் அவர்களுக்கும் தெரியும். எனவே, தங்களையும் தங்கள் திரையரங்கையும் காப்பாற்றி கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வெறி சீரியஸ் அன்ட் பி கேர்புல். இப்படிக்கு அஜீத் ரசிகன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுபோல் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொண்ட மிரட்டல் கடிதம் கண்டு தியேட்டர் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டிற்கு இதுபோன்று மிரட்டல் கடிதம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அஜீத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Gautham Menon calls Yennai Arindhaal a trilogy to KK & VV.

Gautham Menon, though a little hesitant to call Yennai Arindhaal a cop story, says its a trilogy to his earlier films Kaakha Kaakha and Vettaiyaadu Vilaiyaadu. In a sense, I can call it a trilogy of my earlier movies Kaakha Kaakha and Vettaiyaadu Vilaiyaadu, which were apparently police stories. I have made it as realistic as possible, says Gautham Menon.
          Gautham Menon also adds that the film is tight and fast-paced and narrated in such a way that if you blink, you will miss the continuity. I am confident that there will be no complaints on the runtime Ajith, who usually dubs for three to four days for a film, took nearly ten days to finish the dubbing for Yennai Arindhaal. I rode on Ajith’s shoulders to reach the audiences. Ajith is a great human being. More than an anything, he is a myth and an enigma, says Gautham.

          Simply put, Yennai Arindhaal is a journey of a 13-year old boy who wants to fulfill his mother’s wish that he become a doctor, concludes Gautham in his interview.